புதிய முகத்துவார சுரங்கப்பாதை கட்டுமானம் நிறைவு

புதிய முகத்துவாரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நிறைவு

by Staff Writer 22-08-2020 | 4:14 PM
Colombo (News 1st) கொழும்பு வடக்கு, புதிய முகத்துவாரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. கொழும்பு வடக்கு பகுதியில் நீண்டகாலமாக நிலவிய வௌ்ள அனர்த்த நிலைமையைக் கட்டுப்படுத்தும் வகையில், மழைநீர் முகாமைத்துவ திட்டமாக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையின் நிர்மாணப் பணிகள் நேற்றுடன் (21) நிறைவடைந்துள்ளன. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கொழும்பு பெருநகரை அண்மித்த நகர அபிவிருத்தி திட்டமாக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் இந்த திட்டத்தை செயற்படுத்தியது. 321 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதையின் நீளம் 778 மீட்டராகும். ஒரு நிலத்தடி சுரங்கப்பாதை என்ற வகையில், விநாடிக்கு 15,000 லிட்டர் நீர் கடலுக்குள் விடப்படவுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.