அம்பலாங்கொடையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

அம்பலாங்கொடையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர் மீது துப்பாக்கிச்சூடு

by Staff Writer 22-08-2020 | 3:49 PM
Colombo (News 1st) அம்பலாங்கொடை, காலி வீதி - பெரட் சந்தி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை 8.55 அளவில் குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அடையாளந்தெரியாத ஒருவரினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் குலீகொடை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபரைக் கண்டுப்பிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏனைய செய்திகள்