by Staff Writer 21-08-2020 | 3:32 PM
Colombo (News 1st) புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பிலான யோசனைகளை முன்வைப்பதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.
கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (20) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கட்சி என்ற அடிப்படையில், புதிய அரசியலமைப்பின் உருவாக்கத்தில் யோசனைகளை முன்வைக்கும் நோக்குடன் குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இதனடிப்படையில், கட்சியின் யோசனைகளை முன்வைத்து நாட்டிற்கு பொருந்தும் வகையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாகவும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.