902 பொது மன்னிப்பு கைதிகளின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதியிடம் கையளிப்பு 

902 பொது மன்னிப்பு கைதிகளின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதியிடம் கையளிப்பு 

902 பொது மன்னிப்பு கைதிகளின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதியிடம் கையளிப்பு 

எழுத்தாளர் Staff Writer

20 Aug, 2020 | 9:02 am

Colombo (News 1st) பொது மன்னிப்பு வழங்குவதற்கு தகுதியுடைய 902 பேரின் பெயர்ப் பட்டியல் அனுமதிக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சிறு குற்றங்களை இழைத்தோருக்கே ஜனாதிபதியின் அனுமதியுடன் பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

கைதிகள் மற்றும் அவர்களின் விடுதலை குறித்து ஆராய்ந்து பார்ப்பதற்காக அண்மையில் ஜனாதிபதியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தல் மற்றும் சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடியை குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ தலைமையில் குழு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்