கல்வி சீர்திருத்தம் தொடர்பிலான மக்கள் கருத்துகள்..

கல்வி சீர்திருத்தம் தொடர்பிலான மக்கள் கருத்துகளை கேட்டறிய நடவடிக்கை

by Staff Writer 20-08-2020 | 8:12 AM
Colombo (News 1st) புதிய கல்வித் திட்டம் குறித்து மக்களின் கருத்துகளை கேட்டறிவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் இந்த நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய கல்வி நிறுவகம் தெரிவித்துள்ளது. மாவட்ட ரீதியில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுனில் ஜயரத்ன நவரத்ன குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, முன்பள்ளிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைளை முன்னெடுக்கவுள்ளதாக மகளிர் விவகார மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார். இதன் ஒரு கட்டமாக முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.