by Staff Writer 20-08-2020 | 3:50 PM
Colombo (News 1st) அரச செலவுகள் உள்ளடங்கலான இடைக்கால கணக்கறிக்கை நாளை (21) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், இது தொடர்பான விவாதம் எதிர்வரும் வியாழக்கிழமை மற்றும் வௌ்ளிக்கிழமைகளில் நடைபெறவுள்ளதாகக் கூறினார்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று காலை 9.30 க்கு நடைபெற்றது.
சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
அதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.