மாத்தறையில் பொலிஸாரை மோதிய டிப்பர்: மற்றுமொரு கான்ஸ்டபிள் உயிரிழப்பு

மாத்தறையில் பொலிஸாரை மோதிய டிப்பர்: மற்றுமொரு கான்ஸ்டபிள் உயிரிழப்பு

மாத்தறையில் பொலிஸாரை மோதிய டிப்பர்: மற்றுமொரு கான்ஸ்டபிள் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

20 Aug, 2020 | 1:01 pm

Colombo (News 1st) மாத்தறை – ஹக்மனயில் டிப்பர் வாகனம் மோதியதில் படுகாயமடைந்த மற்றுமொரு பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்துள்ளார்.

மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹக்மன வீதியில், வீதித் தடை பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் மீது டிப்பர் வண்டி மோதிய சம்பவம் கடந்த மாதம் 13 ஆம் திகதி இடம்பெற்றது.

இதன்போது, ஹக்மன பொலிஸ் நிலையத்தின் கடமையாற்றிய 36 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்தார்.

விபத்தில் காயமடைந்த மேலும் 2 அதிகாரிகள் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் ஒருவரே இன்று (20) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

கிரிந்த பகுதியைச் சேர்ந்த 47 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்