கனடாவின் முதல் பெண் நிதியமைச்சர் ஃப்ரீலேண்ட்

கனடாவின் முதல் பெண் நிதியமைச்சராக கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் நியமனம்

by Bella Dalima 19-08-2020 | 4:56 PM
Colombo (News 1st) கனடாவின் முதல் பெண் நிதியமைச்சராக கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நிகழ்வு Rideau மண்டபத்தில் மிக எளிமையாக நடைபெற்றது. கொரோனா வைரஸ் காரணமாக நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளான நிலையில், புதிய நிதியமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். 52 வயதான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் இதற்கு முன்னர் பிரதி அமைச்சராக பதவி வகித்துள்ளார். முன்னாள் ஊடகவியலாளரான அவர் 2015 ஆம் ஆண்டு முதன்முறையாக அரசியலுக்குள் பிரவேசித்தார். நிதியமைச்சராக பதவி வகித்த பில் மோர்னே, பயணச் செலவினை மீள செலுத்தாத குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் பதவி விலகினார். இதேவேளை, பாராளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை ஒத்திவைப்பது தொடர்பில், பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ விரைவில் ஊடகங்களுக்கு அறிவிக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றனர்.