ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் என அறிவிப்பு

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன்: உத்தியோகபூர்வ அறிவிப்பு

by Bella Dalima 19-08-2020 | 4:30 PM
Colombo (News 1st) ஜோ பைடன் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டு அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. கொரோனா நெருக்கடியிலிருந்து அமெரிக்காவை மீட்பதற்கு தேவையான அனுபவமும் திறனும் ஜோ பைடனுக்கு உள்ளதாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளான பில் கிளிண்டன் மற்றும் ஜிம்மி கார்ட்டர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வௌ்ளை மாளிகையில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி பில் கிளிங்டன் குறிப்பிட்டுள்ளார்.