சில பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

மின்வெட்டு காரணமாக நாட்டின் சில பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

by Staff Writer 19-08-2020 | 4:39 PM
Colombo (News 1st) மின்வெட்டு காரணமாக நாட்டின் சில பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் முன்னெடுக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. நீர் பம்பிகளை செயற்படுத்துதல், நீரை சேமித்து வைத்திருக்க போதுமான வசதிகள் இல்லாத பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் முன்னெடுக்கப்படும் என ​தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் R.H.ருவினீஸ் குறிப்பிட்டார். இதன் காரணமாக நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.