பிரதமரின் ஊடக செயலாளராக ரொஹான் வெலிவிட்ட நியமனம்

பிரதமரின் ஊடக செயலாளராக ரொஹான் வெலிவிட்ட நியமனம்

பிரதமரின் ஊடக செயலாளராக ரொஹான் வெலிவிட்ட நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

19 Aug, 2020 | 3:57 pm

Colombo (News 1st) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் ஊடக செயலாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் ரொஹான் வெலிவிட்ட நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமரின் செயலாளர் காமினி செனவிரத்னவினால் இதற்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

2000 ஆம் ஆண்டில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கடற்றொழில் அமைச்சராக செயற்பட்டபோது அவரின் ஆலோசகராக ரொஹான் வெலிவிட்ட நியமிக்கப்பட்டிருந்தார்.

அதன் பின்னர், பிரதமர் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த போதும் அவரது ஊடக செயலாளராக ரொஹான் வெலிவிட்ட கடமையாற்றினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்