தீயினால் சேதமடைந்த தொண்டமான் குடும்பத்தினரின் பூர்வீக வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு

தீயினால் சேதமடைந்த தொண்டமான் குடும்பத்தினரின் பூர்வீக வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு

தீயினால் சேதமடைந்த தொண்டமான் குடும்பத்தினரின் பூர்வீக வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Aug, 2020 | 6:16 pm

Colombo (News 1st) தீயினால் சேதமடைந்த இறம்பொடை வெவன்டனிலுள்ள தொண்டமான் குடும்பத்தினரின் பூர்வீக வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

வெவன்டனில் அமைந்துள்ள தொண்டமான் குடும்பத்தினரின் பூர்வீக வீடு நேற்று (18) தீயினால் சேதமடைந்தது.

இதனையடுத்து, வீட்டை சுற்றி பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், வீட்டினுள் பிரவேசிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தீப்பிடித்தமைக்கான காரணத்தைக் கண்டறியும் பொருட்டு, இரசாயன பகுப்பாய்வாளர்கள் இன்று காலை வெவன்டன் தொண்டமான் இல்லத்திற்கு சென்றிருந்தனர்.

அவர்கள் இன்று காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை இரசாயன பகுப்பாய்வுகளில் ஈடுபட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்