100 கோடி ரூபா பெறுமதியான நாணயத்தாள்களுடன் மூவர் முல்லேரியாவில் கைது 

100 கோடி ரூபா பெறுமதியான நாணயத்தாள்களுடன் மூவர் முல்லேரியாவில் கைது 

100 கோடி ரூபா பெறுமதியான நாணயத்தாள்களுடன் மூவர் முல்லேரியாவில் கைது 

எழுத்தாளர் Staff Writer

18 Aug, 2020 | 10:17 am

Colombo (News 1st) முல்லேரியாவில் சட்டவிரோத நாணயத்தாள்களுடன் மூவர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (17) மாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 5,000 ரூபா நாணயத்தாள்கள் அடங்கிய 125 பணக்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட பணத்தின் பெறுமதி, 100 கோடி ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.

முல்லேரியா, அங்கொடை, ஜாஎல பகுதிகளைச் சேர்ந்த 34, 37 மற்றும் 42 வயதானவர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களின் காரொன்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்கள் முல்லேரிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்