தமிழ் பிழையைத் திருத்தினார் நாமல் ராஜபக்ஸ

பெயர் பலகையில் இருந்த தமிழ் பிழையைத் திருத்தினார் நாமல் ராஜபக்ஸ

by Staff Writer 18-08-2020 | 5:57 PM
Colombo (News 1st) விளையாட்டுத்துறை அமைச்சின் பெயர் பலகையில் காணப்பட்ட தமிழ் பிழையை விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஸ திருத்தியுள்ளார். உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு முன்னதாக அமைச்சின் பெயர் பலகையிலுள்ள தமிழ் பிழையை திருத்தி, மொழி உரிமைக்கு அமைச்சர் முக்கியத்துவம் வழங்கியுள்ளதாக அமைச்சின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. மும்மொழிக் கொள்கை இலங்கையில் அமுலில் உள்ளது என்பதனை உறுதிபடுத்தும் வகையில் அமைச்சர் நாமல் ராஜபக்ஸவின் இந்த செயற்பாடு அமைந்துள்ளதாகவும் அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்