பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருள் விற்பனை

பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருள் விற்பனை

by Staff Writer 18-08-2020 | 8:53 AM
Colombo (News 1st) பரிசோதனைகளுக்காக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது. போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்கள ஊழியர்கள் இருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இது தொடர்பான தகவல் வௌியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சட்டவிரோத செயற்பாட்டுடன் வேறு ஊழியர்கள் தொடர்புபட்டுள்ளனரா என்பதை கண்டறிவதற்கான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துருகிரிய, மொரட்டுவாஹேன பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்கள ஊழியர் 7 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் விசாரிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் கைது செய்யப்படும் போது அவரிடம் 18 கிராம் 730 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. இதேவேளை, ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் மற்றுமொரு ஊழியர் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். சந்தேக நபரை இன்று (18) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.