லெபனானின் முன்னாள் பிரதமர் கொலை வழக்கின் தீர்ப்பு வௌியானது

லெபனானின் முன்னாள் பிரதமர் கொலை வழக்கின் தீர்ப்பு வௌியானது

லெபனானின் முன்னாள் பிரதமர் கொலை வழக்கின் தீர்ப்பு வௌியானது

எழுத்தாளர் Bella Dalima

18 Aug, 2020 | 5:35 pm

Colombo (News 1st) லெபனானின் முன்னாள் பிரதமர் ரஃபிக் அல் ஹரிரியின் ( Rafik al-Hariri) கொலையுடன் ஹிஸ்புல்லா அமைப்போ சிரிய அரசாங்கமோ தொடர்புபட்டமைக்கான எவ்வித ஆதாரங்களும் இல்லையென நீதியரசர் குழாம் அறிவித்துள்ளது.

ஹரிரியின் கொலையுடன் தொடர்புடையதாக தெரிவித்து ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு மூவரடங்கிய நீதியரசர் குழாமினால் இன்று அறிவிக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் ஹரிரி மற்றும் அவரின் அரசியல் சகாக்களையும் ஆட்சியில் இருந்து நீக்குவதற்கான எண்ணம் சிரிய அரசாங்கத்திற்கும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இருந்திருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டது.

எனினும், கொலையுடன் அவர்கள் தொடர்புபட்டுள்ளமைக்கான எவ்வித நேரடி ஆதாரங்களும் இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் 2,600 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.

ஹரிரி கடந்த 2005 ஆம் ஆண்டு பெய்ரூட்டில் நடத்தப்பட்ட தற்கொலை கார்க்குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இந்த தாக்குதல் தொடர்பில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த நால்வர், சிரிய அரசாங்கத்துடன் தொடர்புடைய சிலருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்