பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட ஒருவர் கைது 

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட ஒருவர் கைது 

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட ஒருவர் கைது 

எழுத்தாளர் Staff Writer

18 Aug, 2020 | 11:39 am

Colombo (News 1st) தொம்பே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு 2 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக வழங்க முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கஞ்சா கைப்பற்றப்பட்ட சம்பவத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காதிருக்க, இலஞ்சம் வழங்க முற்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் விசாரணை பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மினி வீரசூரிய தெரிவித்தார்.

தமது சகோதரரை குறித்த வழக்கிலிருந்து காப்பாற்றுவதற்காக குறித்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறு இலஞ்சம் வழங்க முயற்சித்துள்ளார்.

இதேவேளை, கண்டி தொழில் அலுவலகத்தில் பணிபுரிந்த அதிகாரியிடமிருந்து இலஞ்சம் பெற முற்பட்ட ஒருவர் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு இடமாற்றம் வழங்குவதற்கும் திகன பகுதியிலுள்ள அரச காணியொன்றின் பகுதியை வழங்குவதற்கும் 26,000 ரூபா இலஞ்சம் கோரப்பட்டுள்ளது.

இதில் 21,000 ரூபாவை இலஞ்சமாக பெற்ற சந்தர்ப்பத்திலேயே, துறைமுகத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, குறித்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை 50,000 ரூபா இலஞ்சம் பெறுவதற்கு முயற்சித்த நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தளை பகுதியில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்