சீனாவிற்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் முன்னாள் CIA அதிகாரி கைது

சீனாவிற்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் முன்னாள் CIA அதிகாரி கைது

சீனாவிற்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் முன்னாள் CIA அதிகாரி கைது

எழுத்தாளர் Staff Writer

18 Aug, 2020 | 11:26 am

Colombo (News 1st) சீனாவிற்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் முன்னாள் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய புலனாய்வு அமைப்பில் பணியாற்றிய, சீனாவிற்காக உளவு பார்த்த தமது உறவினர் ஒருவருடன் இணைந்து அவர் இந்த சதிச் செயலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுகின்றது.

அலெக்ஸாண்டர் யுக் சிங் மா (Alexander Yuk Ching Ma) என்ற 67 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை திணைக்களம் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.

வகைப்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்பு தகவல்களை சீன புலனாய்வு அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதாக இவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா – சீனா இடையிலான மோதல் வலுப்பெற்றுவரும் நிலையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்