சிறைச்சாலை அதிகாரிகள் 15 பேர் பணியிலிருந்து இடைநிறுத்தம்

சிறைச்சாலை அதிகாரிகள் 15 பேர் பணியிலிருந்து இடைநிறுத்தம்

சிறைச்சாலை அதிகாரிகள் 15 பேர் பணியிலிருந்து இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

18 Aug, 2020 | 9:33 am

Colombo (News 1st) பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 15 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 8 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் இவர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

இவர்களுள் சிறைச்சாலை அதிகாரிகள் மூவர் உள்ளிட்ட 11 பேர் உள்ளடங்குவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேலும் கூறியுள்ளார்.

அனுமதி மறுக்கப்பட்ட பொருட்களை சிறைச்சாலைக்குள் கொண்டு சென்றமை தொடர்பில் இவர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் கடந்த வாரம் மேலும் 21 சிறைச்சாலை அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பூசா சிறைச்சாலை, நீர்கொழும்பு, வாரியபொல மற்றும் போகம்பரை சிறைச்சாலைகளில் இருந்த 21 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்