இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ள பொருட்கள்…

இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ள பொருட்கள்…

இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ள பொருட்கள்…

எழுத்தாளர் Staff Writer

18 Aug, 2020 | 1:58 pm

Colombo (News 1st) செத்தல் மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் மசாலாப் பொருட்களின் இறக்குமதிக்கு எதிர்காலத்தில் கட்டுப்பாடு விதிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

சோளம், பாசிப்பயறு, கௌப்பி, உளுந்து, எள்ளு, மிளகு, இஞ்சி மற்றும் மஞ்சள் உள்ளிட்ட உப உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

எக் காரணத்திற்காகவும் குறித்த பொருட்களின் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்நாட்டு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பெரும்போக அறுவடையை ஆராய்ந்ததன் பின்னரே, எதிர்வரும் நாட்களில் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படும் என விவசாய அமைச்சின் செயலாளர், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா மேலும் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்