மஞ்சள் தட்டுப்பாட்டை நிவர்த்திக்க நடவடிக்கை

மஞ்சள் தட்டுப்பாட்டை விரைவில் நிவர்த்திக்க நடவடிக்கை

by Staff Writer 17-08-2020 | 7:03 PM
Colombo (News 1st) நாட்டில் மஞ்சளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை ஒன்றரை வருடங்களுக்குள் நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சிறுதோட்ட பயிர் அபிவிருத்தி மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். நாட்டில் மஞ்சள் செய்கையை விஸ்தரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நாட்டு மக்களின் தேவைகளை பூர்த்திசெய்யக்கூடிய அளவில் மஞ்சள் காணப்படுகிறதா? இல்லையா? என்பது தொடர்பில் தற்போது ஆராயப்படுவதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர குறிப்பிட்டுள்ளார். விலையை அதிகரிக்கும் வரை மஞ்சள் மறைத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது அதிக விலையில் மஞ்சள் விற்பனை செய்யப்படுவதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர கூறியுள்ளார். இந்த முறைப்பாடுகள் குறித்து சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவித்துள்ளதாகவும் சிறுதோட்ட பயிர் அபிவிருத்தி மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய செய்திகள்