by Staff Writer 17-08-2020 | 10:12 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் 75 வீதமான மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் பிரிவினர் மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவர பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
மின்பிறப்பாக்கி கட்டமைப்பில் இன்று (17) நண்பகல் 12.35 மணியளவில் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, நாடளாவிய ரீதியில் மின் விநியோகம் தடைப்பட்டது.
மின் துண்டிப்பினால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதால் நாட்டின் சில பகுதிகளில் நீர் விநியோகத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
மின்சார விநியோகம் ஆரம்பிக்கப்பட்டு 3 தொடக்கம் 5 மணித்தியாலங்களின் பின்னரே நீர் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வர முடியும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.