​தொழில் கிடைத்தோர் விபரம் இணையத்தளத்தில் வௌியீடு

​தொழில் கிடைத்தோர் விபரம் இணையத்தளத்தில் வௌியீடு

​தொழில் கிடைத்தோர் விபரம் இணையத்தளத்தில் வௌியீடு

எழுத்தாளர் Staff Writer

17 Aug, 2020 | 8:17 am

Colombo (News 1st) வேலைவாய்ப்பை பெற்றுள்ள பட்டதாரிகளின் பெயர்ப் பட்டியல் பொதுச் சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

www.pubad.gov.lk என்ற இணையத்தளம் மற்றும் அமைச்சின் பேஸ்புக் பக்கத்தில் பெயர்ப் பட்டியலை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் நியமனக் கடிதங்கள் அமைச்சினால் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்புகளை பெற்றுள்ள பட்டதாரிகள் எதிர்வரும் 2ஆம் திகதி தொடக்கம் கடமைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

50,000 பட்டதாரிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சம் பேருக்கு தொழில் வழங்கும் செயற்றிட்டத்தை உடனடியாக அமுல்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல் காரணமாக தொழில் வழங்கும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.

எவ்வாறாயினும், பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று கடந்த பெப்ரவரி மாதம் தெரிவுகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்