ட்ரம்ப்பின் சகோதரர் ரொபேர்ட் ட்ரம்ப் காலமானார்

டொனால்ட் ட்ரம்ப்பின் இளைய சகோதரர் ரொபேர்ட் ட்ரம்ப் காலமானார்

by Chandrasekaram Chandravadani 16-08-2020 | 12:20 PM
Colombo (News 1st) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இளைய சகோதரர் ரொபேர்ட் ட்ரம்ப் (Robert Trump) வைத்தியசாலையில் காலமானார். தமது அன்புச் சகோதரர் உயிரிழந்ததை மிகவும் கனத்த இதயத்துடன் அறிவிப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் தமது சகோதரர் மாத்திரமன்றி, மிக நெருங்கிய நண்பர் எனவும் ட்ரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார். 72 வயதான ரொபேர்ட் ட்ரம்ப், இறப்பதற்கு முன்னர் நியூயோர்க்கிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று அவரை பார்வையிட்டிருந்தார். இதனிடையே ரொபேர்ட் ட்ரம்ப் உயிரிழந்தமைக்கான காரணம் தௌிவாக தெரியாதுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் கடுமையான நோயினால் பீடிக்கப்பட்டிருந்ததாக, அநேகமான அமெரிக்க ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.