by Staff Writer 16-08-2020 | 9:21 AM
Colombo (News 1st) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் விக்கெட் காப்பாளருமான மஹேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.
39 வயதுடைய அவர் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பதிவான அதி சிறந்த அணித்தலைவராக வர்ணிக்கப்படுகிறார்.
இரண்டாவது தடவையாக உலக சம்பியனாகும் இந்திய அணியின் கனவை 2011 ஆம் ஆண்டில் நிறைவேற்றிய மஹேந்திர சிங் தோனி, இருபதுக்கு 20 உலக சம்பியன் பட்டத்தை 2007 இல் ஈட்டிக்கொடுத்தவராவார்.
மஹேந்திர சிங் தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் 4,876 ஓட்டங்களையும் 350 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 10,773 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் சகலதுறை வீரரான சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.