அமெரிக்கா - போலந்து இடையே பாதுகாப்பு ஒப்பந்தம்

அமெரிக்கா - போலந்து இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து

by Staff Writer 16-08-2020 | 12:09 PM
Colombo (News 1st) அமெரிக்கா மற்றும் போலந்து ஆகிய நாடுகளுக்கு இடையில் புதிய பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஜெர்மனியிலுள்ள அமெரிக்க படையினரை மீள பெற்று, போலந்தில் நிலைநிறுத்துவது தொடர்பில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவினால் இந்த உடன்படிக்கை கைச்சாத்தாகியுள்ளது. இந்த உடன்படிக்கையின் மூலம் போலந்திலுள்ள அமெரிக்க படையினரின் எண்ணிக்கை 5,500 ஆக அதிகரிக்கவுள்ளது. இதனிடையே அச்சுறுத்தலொன்று உறுதிப்படுத்தப்படுமிடத்து அமெரிக்க படையினரின் எண்ணிக்கையை 20,000 ஆக அதிகரிக்க முடியுமென போலந்து பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பிற்குப் போதியளவு பங்களிப்பினை ஜெர்மனி செய்யவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னர் குற்றஞ்சுமத்தியிருந்தார். எவ்வாறாயினும் அமெரிக்காவின் இந்த நகர்வானது ரஷ்ய ஆதிக்க விரிவாக்கத்திற்கு வழிவகுக்குமென்ற அச்ச உணர்வை நேட்டோ பங்காளிகளுக்கிடையில் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.