by Bella Dalima 15-08-2020 | 4:30 PM
பிரபல பாடகர் S.P.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் S.P.B.சரண் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்
S.P.பாலசுப்பிரமணியம் சிகிச்சை பெற்று வருகின்றார்.
S.P.B-யின் உடல் நிலை அச்சப்படும் நிலையில் இல்லை எனவும் சரண் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளான S.P.B-யின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால், நேற்று முன்தினம் இரவு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையிலேயே, அவரது உடல் நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என அவரது மகன் S.P.B.சரண் தெரிவித்துள்ளார்.