ஐக்கிய தேசியக் கட்சியினர் விசேட பேச்சுவார்த்தை

by Staff Writer 15-08-2020 | 10:12 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் சிறிகொத்தவிலுள்ள தலைமையகத்தில் இன்று விசேட சந்திப்பில் ஈடுபட்டனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், பிரதேச அமைப்பாளர்கள், கட்சியின் சிரேஷ்ட அங்கத்தவர்கள் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.