துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த வல்லப்பட்டை, வெண் சந்தனம் கைப்பற்றல்

துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த வல்லப்பட்டை, வெண் சந்தனம் கைப்பற்றல்

துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த வல்லப்பட்டை, வெண் சந்தனம் கைப்பற்றல்

எழுத்தாளர் Staff Writer

15 Aug, 2020 | 3:51 pm

Colombo (News 1st) சட்டவிரோதமான முறையில் துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த வல்லப்பட்டை, வெண் சந்தனம் ஆகியவற்றை சுங்கத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

ஒரு கோடியே 25 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய 120 கிலோகிராம் நிறையுடைய வெண் சந்தனம் மற்றும் 120 கிலோகிராம் நிறையுடைய வல்லப்பட்டை என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப்பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு – கொள்ளுப்பிட்டியைச் சேர்ந்த ஏற்றுமதி வர்த்தகர் ஒருவரினால் இவை பழங்கள் என்ற ​போர்வையில் ஏற்றுமதி செய்யப்படவிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகத்திற்கிடமான பொதிகளை சோதனையிட்ட போதே வல்லப்பட்டை மற்றும் வெண் சந்தனம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மூவர் தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதாக சுங்க ஊடகப்பேச்சாளர் சுனிஸ் ஜயரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்