இலங்கையின் இசைக் குழுவினருக்கு ஆசியாவின் WOW விருது

இலங்கையின் இசைக் குழுவினருக்கு ஆசியாவின் WOW விருது

எழுத்தாளர் Staff Writer

15 Aug, 2020 | 8:41 pm

Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டிற்கான WOW Awards Asia விருது இலங்கையின் இசைக் கலைஞர் சரித்த அட்டலகே (Charitha Attalage) குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுடன் இந்த தங்க விருது பகிரப்பட்டமை சிறப்பம்சமாகும்.

ஓர் சினிமா இசை அனுபவத்தைப் பெற்றுக்கொடுத்த சரித்தா அட்டலகே மற்றும் அவரது குழுவினர் நடத்திய இசை நிகழ்ச்சி இலங்கையில் புதிய இசை பரிமாணத்தை ஏற்படுத்தியது.

சரித்த அட்டலாகே மற்றும் அவரது குழுவினரால் 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் 15 ஆம் திகதி கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இலங்கை இசைத்துறையில் இதற்கு முன்பில்லாதவாறான வகையில் இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டதுடன், எதிர்வரும் மாதங்களில் பல இசை நிகழ்ச்சிகளை இக்குழுவினர் நடத்தவுள்ளனர்.

ஆசியா முழுவதிலும் இருந்து 1800-க்கும் மேற்பட்டோர் ஆசியாவின் WOW விருதிற்கான போட்டியில் கலந்து கொண்டனர்.

WOW விருதுகள் ஆசிய பிராந்தியத்தின் மிகப்பெரிய மற்றும் நீண்டகாலமாக இயங்கும் வணிக மற்றும் நிகழ்வுத் தொழிற்துறைக்கான அங்கீகாரத் தளமாகும்.

12 ஆவது முறையாகவும் இந்த விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.

ஒஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏர்.ஆர்.ரஹ்மான் திருச்சியில் நடத்திய இசை நிகழ்ச்சிக்கும் Kuweni live In concert குழுவினரின் நிகழ்ச்சிக்கும், இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்