இந்தியாவின் 74 ஆவது சுதந்திர தின விழாவில் பங்கேற்க 4000 பேருக்கு மாத்திரமே அனுமதி

இந்தியாவின் 74 ஆவது சுதந்திர தின விழாவில் பங்கேற்க 4000 பேருக்கு மாத்திரமே அனுமதி

இந்தியாவின் 74 ஆவது சுதந்திர தின விழாவில் பங்கேற்க 4000 பேருக்கு மாத்திரமே அனுமதி

எழுத்தாளர் Bella Dalima

15 Aug, 2020 | 4:07 pm

Colombo (News 1st) இந்தியாவின் 74 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது.

இந்தியாவின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அந்நாட்டு மக்களிடையே உரையாற்றியுள்ளார்.

எல்லையில் ஆக்கிரமிப்பு முயற்சிகளை எந்த நாடு மேற்கொண்டாலும் தக்க பதிலடி கிடைக்கும் என்பதை தமது வீரர்களின் மகத்தான தியாகம் வெளிப்படுத்தியுள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் நாட்டின் முயற்சிகளைப் பாராட்டிய குடியரசுத் தலைவர், மத்திய அரசு இந்த நெருக்கடியை முன்கூட்டியே தடுத்து, சரியான நேரத்தில் முடிவுகளை எடுத்ததுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு, சுதந்திர தின விழாக்கள் வழமை போல் இடம்பெற்றிருக்கவில்லை.

செங்கோட்டையில் சுதந்திர தின விழாவில் பங்கேற்க 4000 பேருக்கு மாத்திரமே இம்முறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டெல்லி செங்கோட்டையில் நாட்டின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தேசியக் கொடியேற்றினார்.

பின்னர் நாட்டு மக்களிடையே ”ஆத்மா நிர்பர் பாரத்” (தன்னம்பிக்கை கொண்ட இந்தியா) 130 கோடி இந்தியர்களுக்கு ஒரு மந்திரமாக மாறியுள்ளது எனவும் அது ஒரு யதார்த்தமாக மாறும் என்றும் மோடி தனது உரையில் கூறியுள்ளார்.

மேலும், விவசாயத்திலும் விவசாயிகளிடமும் தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை பாரதப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்