20 ஆம் திகதி பாராளுமன்ற கன்னி அமர்வு: அதிவிசேட வர்த்தமானி வௌியீடு 

20 ஆம் திகதி பாராளுமன்ற கன்னி அமர்வு: அதிவிசேட வர்த்தமானி வௌியீடு 

20 ஆம் திகதி பாராளுமன்ற கன்னி அமர்வு: அதிவிசேட வர்த்தமானி வௌியீடு 

எழுத்தாளர் Staff Writer

14 Aug, 2020 | 4:23 pm

Colombo (News 1st) ஒன்பதாவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்விற்கான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 20 ஆம் திகதி முற்பகல் 09.30-க்கு 9 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது, புதிய சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் ஆகியோர் நியமிக்கப்படவுள்ளதாக அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்