போலி ஆவணங்கள் தயாரிப்பு: ஒருவர் கைது

நாரஹேன்பிட்டியில் போலி ஆவணங்களைத் தயாரித்த நிலையம் சுற்றிவளைப்பு: ஒருவர் கைது

by Staff Writer 14-08-2020 | 4:17 PM
Colombo (News 1st) நாரஹேன்பிட்டியில் அரச உத்தியோகத்தர்களின் முத்திரைகள் மற்றும் ஆவணங்களைப் போலியாகத் தயாரித்த நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்திற்கு அருகில் குறித்த நிலையம் அமைந்துள்ளதுடன், அதனை நடத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு தெற்கு பிராந்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நிலையத்திலிருந்து பொலிஸ் தலைமையதிகாரிகள், சமாதான நீதவான்கள், மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளின் சுமார் 88 போலி முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாகன சாரதி அனுமதிப்பத்திரம், அடையாள அட்டைகள், முறைப்பாட்டுப் பத்திரங்களின் பிரதிகள், பிறப்புச் சான்றிதழ்கள் உள்ளிட்ட 19 போலி ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேகநபர் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

ஏனைய செய்திகள்