மூன்று அமைச்சுகளுக்கு புதிதாக செயலாளர்கள் நியமனம்

மூன்று அமைச்சுகளுக்கு புதிதாக செயலாளர்கள் நியமனம்

by Bella Dalima 14-08-2020 | 3:13 PM
Colombo (News 1st) மூன்று அமைச்சுகளுக்கு புதிதாக செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அமைச்சின் செயலாளர்களுக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சின் செயலாளராக M.M.P.K. மாயாதுன்ன நியமிக்கப்பட்டுள்ளார். துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சின் செயலாளராக U.D.C. ஜயலால் நியமிக்கப்பட்டுள்ளார். புத்த சாசன, மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சின் செயலாளராக பேராசிரியர் கபில குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் (13) 25 புதிய அமைச்சுகளின் செயலாளர்கள் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.