மலேசியாவில் 45 பேருக்கு கொரோனா வைரஸை பரப்பியவருக்கு சிறைத்தண்டனை

மலேசியாவில் 45 பேருக்கு கொரோனா வைரஸை பரப்பியவருக்கு சிறைத்தண்டனை

மலேசியாவில் 45 பேருக்கு கொரோனா வைரஸை பரப்பியவருக்கு சிறைத்தண்டனை

எழுத்தாளர் Bella Dalima

14 Aug, 2020 | 4:54 pm

Colombo (News 1st) மலேசியாவில் 45 பேருக்கு கொரோனா வைரஸை பரப்பிய ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிவகங்கை பகுதியில் இருந்து கடந்த மாதம் மலேசியாவிற்கு சென்ற ஒருவரிடமிருந்து 45 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது.

இதனையடுத்து, அவருக்கு மலேசிய நீதிமன்றம் 5 மாத சிறைத்தண்டனையும் 12 ,000 மலேசிய ரிங்கிட் அபராதமும் விதித்துள்ளது.

மலேசியா திரும்பிய பின்னர் 14 நாட்கள் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என குறித்த நபருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும், அவர் அதனை பின்பற்றவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், அவரிடமிருந்து சுமார் 03 மாநிலங்களைச் சேர்ந்த பலருக்கு வைரஸ் தொற்று பரவியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்