தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்தவர்கள் ஒரு அணியில் வர வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்தவர்கள் ஒரு அணியில் வர வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தல்

எழுத்தாளர் Bella Dalima

14 Aug, 2020 | 7:27 pm

Colombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒரு அணியில் வர வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்திலாவது தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பொது விடயத்தில் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் காலம் கணிகின்ற போது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் வருகின்ற சூழலை உருவாக்க முடியும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் கூறினார்.

பழையதை மறந்து நாங்கள் ஒன்றிணைய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். இந்த அரசாங்கத்துடன் பேச நாங்கள் தயாராக இல்லை. சர்வதேசம் பதில் சொல்லும் வாய்ப்பை உண்டு பண்ணும் முறையைக் கையாள்வோம்

என அவர் மேலும் கூறினார்.

முல்லைத்தீவில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்விடயங்களைத் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்