கொரோனா தொற்று: எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம்

கொரோனா தொற்று: எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம்

கொரோனா தொற்று: எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம்

எழுத்தாளர் Bella Dalima

14 Aug, 2020 | 6:42 pm

Colombo (News 1st) கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் பிரபல தென்னிந்தியப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை சீராக இருப்பதாக, அவர் சிகிச்சை பெற்றுவரும் வைத்தியசாலை முதலில் அறிக்கை வெிளியிட்டிருந்தது.

இந்நிலையில், இன்று வைத்தியசாலை வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவ நிபுணர்களின் ஆலாசனைகளுக்கு அமைய அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல் நிலை ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்