ட்ரம்ப்பை விமர்சித்த ஜோ பைடன் – கமலா ஹாரிஸ் ஜோடி

ட்ரம்ப்பை விமர்சித்த ஜோ பைடன் – கமலா ஹாரிஸ் ஜோடி

ட்ரம்ப்பை விமர்சித்த ஜோ பைடன் – கமலா ஹாரிஸ் ஜோடி

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

13 Aug, 2020 | 8:14 am

Colombo (News 1st) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திறமையற்ற தலைவர் என ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் ஆகியோர் விமர்சித்துள்ளனர்.

ட்ரம்பின் மோசமான நிர்வாகத்தால் நாடு மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பைடன் தமது துணை ஜனாதிபதி பதவிக்கு கமலா ஹாரிஸின் பெயரை பரிந்துரை செய்ததைத் தொடர்ந்து இருவரும் முன்னெடுத்த முதலாவது பிரசாரத்தில் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கமலா ஹாரிஸ், பாறை போன்று தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி ட்ரம்பை எதிர்த்து ஜோ பைடன் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்