by Staff Writer 13-08-2020 | 2:20 PM
Colombo (News 1st) சட்டவிரோதமாக துப்பாக்கிகளை தயாரித்த சந்தேக நபரொருவர் வலஸ்முல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 2 துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரிடமிருந்து துப்பாக்கி தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் பல்வேறு உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது கைதான 61 வயதான சந்தேக நபர் இன்று (13) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.