முள்ளிவாய்க்காலில் சி.வி.விக்னேஸ்வரன் அஞ்சலி

முள்ளிவாய்க்காலில் சி.வி.விக்னேஸ்வரன் அஞ்சலி

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2020 | 5:08 pm

Colombo (News 1st) பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர், முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், முள்ளிவாய்க்காலில் இன்று அஞ்சலி செலுத்தினார்.

சி.வி.விக்னேஸ்வரன் இன்று முல்லைத்தீவிற்கு விஜயம் செய்தார்.

இதன்போது, இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த மக்களின் நினைவாக முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தினர்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.கே.சிவாஜிலிங்கம், சுரேஸ் பிரேமச்சந்திரன், அனந்தி சசிதரன் உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்