சவாலை ஏற்று மரக்கன்று நாட்டிய இளைய தளபதி

சவாலை ஏற்று மரக்கன்று நாட்டிய இளைய தளபதி - வைரலாகும் புகைப்படங்கள்

by Chandrasekaram Chandravadani 13-08-2020 | 10:16 AM
இளைய தளபதி விஜய் மரக்கன்றொன்றை நாட்டும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது. நடிகர் மகேஷ் பாபு விடுத்த சவாலை ஏற்றுக்கொண்ட இளைய தளபதி, தனது வீட்டில் மரக்கன்று ஒன்றை நாட்டியுள்ளார். தாம் ஒரு மரக்கன்றை நாட்டிவிட்டு அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி, அதேபோல் வேறு மூவர் மரக்கன்றை நாட்ட வேண்டும் என்ற 'பசுமை இந்தியா' என்ற சவால் தற்போது பிரபலமாகி வருகின்றது. அதனடிப்படையில், தனது பிறந்த தினத்தன்று மரக்கன்றொன்றை நாட்டிய தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, நடிகர் விஜய், நடிகை ஸ்ருதி ஹாசன் மற்றும் நடிகர் ஜூனியர் NTR ஆகியோருக்கு சவால் விடுத்தார். மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற இளைய தளபதி மரக்கன்றொன்றை நாட்டி அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினார். இது தளபதியின் இரகசிர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.