கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடமைகளை ஆரம்பித்தார்

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடமைகளை ஆரம்பித்தார்

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2020 | 7:21 pm

Colombo (News 1st) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று தனது கடமைகளை ஆரம்பித்தார்.

கொழும்பு 10, மாளிகாவத்தையிலுள்ள அமைச்சு அலுவலகத்தில் இன்று காலை தமது கடமைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொறுப்பேற்றார்.

இதன்போது, கடற்றொழிலாளர்களின் முன்னேற்றத்தைக் கவனத்தில் கொள்வதும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை, அபிவிருத்திக்கு தீர்வு காண்பதுமே தமது பிரதான கடமைகள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.

மேலும், புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள விரும்பினால், அதற்கு வௌிப்படையான உத்தரவாதத்தை தாம் வழங்குவதாகவும் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்