by Staff Writer 13-08-2020 | 11:15 AM
Colombo (News 1st) ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகின்றது.
ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் வைரஸின் தாக்கம் மீள ஏற்பட்டுள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதில் குறித்த நாடுகள் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
ஜெர்மனியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 1,200 இற்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது கடந்த 3 மாதங்களின் பின்னர் நாளொன்றில் பதிவாகிய மிக அதிகமான நோயாளர்களின் எண்ணிக்கையாகும்.
இதேவேளை, பிரான்ஸில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2,524 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இது கடந்த மே மாதம் முடக்கல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர் நாளொன்றின் பதிவாகிய அதிகூடிய நோயாளர்களின் எண்ணிக்கையாகும்.
விடுமுறை சுற்றுலா சென்று திரும்புகின்றமையே இந்த திடீர் அதிகரிப்பு ஏற்படுவதற்கான பகுதி காரணமென ஜேர்மனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்பெயினுக்கு அத்தியவசிய தேவையற்ற பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்குமாறு ஜெர்மனி ஏற்கனவே பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஸ்பெயினில் கடந்த வாரத்தின் ஒவ்வொரு தினத்திலும் 4,000 இற்கும் அதிகமான கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கடந்த வாரத்தில் மாத்திரம் 4,923 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.