இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று

இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று

இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2020 | 1:49 pm

Colombo (News 1st) இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (13) ஆரம்பமாகவுள்ளது.

மென்செஸ்டரில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 – 0 என இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் உலக சம்பியன்ஷிப்பின் ஓர் அங்கமாக இரு அணிகளுக்குமிடையிலான டெஸ்ட் போட்டித் தொடர் நடைபெற்று வருகின்றது.

டெஸ்ட் உலக சம்பியன்ஷிப்பில் 266 புள்ளிகளுடன் இங்கிலாந்து மூன்றாமிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் 140 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தில் நீடிக்கிறது.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் முறையே முதலாம் இரண்டாம் இடங்களில் நீடிக்கின்றன.

பாகிஸ்தானின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான பபர் அஸாமுக்கு டெஸ்ட் அரங்கில் 2,000 ஓட்டங்களை கடப்பதற்கு மேலும் 76 ஓட்டங்கள் தேவைப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்