by Staff Writer 12-08-2020 | 6:17 PM
Colombo (News 1st) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று ஆஜரான முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சுமார் 06 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் குறித்தே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரிஷாட் பதியுதீன் இதற்கு முன்னர் பல தடவைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.