புதிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் விபரம்

by Staff Writer 12-08-2020 | 12:29 PM
Colombo (News 1st) புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள 25 அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர்கள் 39 பேரும் இன்று (12) பதவியேற்றனர். கண்டி ஶ்ரீதலதா மாளிகை வளாகத்திலுள்ள, மகுல் மடுவ மண்டபத்தில் பதவியேற்வு வைபவம் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமாகி காலை 11 மணி வரை இடம்பெற்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்களுக்கு முதலில் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டதுடன், பின்னர் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் கூட்டாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். புதிய அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ செயற்படவுள்ளார். அதற்கு மேலதிகமாக 25 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்கள்:  கொழும்பு - பிரதீப் உதுகொட கம்பஹா மாவட்டம் - சமன் பிரதீப் விதான களுத்துறை - சஞ்சீவ எதிரிமான்ன கண்டி - வசந்த யாப்பா பண்டார மாத்தளை - எஸ். நாமக்க பண்டார நுவரெலியா - எஸ். பி. திசாநாயக்க காலி - சம்பத் அத்துகோரள மாத்தறை - நிபுண ரணவக்க ஹம்பாந்தோட்டை - உபுல் கலப்பத்தி யாழ்ப்பாணம் - அங்கஜன் இராமநாதன் கிளிநொச்சி - டக்ளஸ் தேவாநந்தா வவுனியா - கே. திலீபன் மன்னார் மற்றும் முல்லைத்தீவு - காதர் மஸ்தான் அம்பாறை - டி. வீரசிங்க திருகோணமலை - கபில அத்துகோரள குருநாகல் - குணபால ரத்னசேகர புத்தளம் - அசோக பிரியந்த அநுராதபுரம் - எச். நந்தசேன பொலன்னறுவை - அமரகீர்த்தி அத்துகோரள பதுளை - சுதர்ஷன தெனிபிட்டிய மொனராகலை - குமாரசிறி ரத்நாயக்க இரத்தினபுரி - அகில எல்லாவல கேகாலை - திருமதி ராஜிகா விக்ரமசிங்க இராஜாங்க அமைச்சர்கள்:  1. உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் - சமல் ராஜபக்ஸ 2. வௌிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை இராஜாங்க அமைச்சர் - பிரியங்கர ஜயரத்ன 3. சூரிய சக்தி காற்று மற்றும் நீர் உற்பத்தி இராஜாங்க அமைச்சர் - துமிந்த திசாநாயக்க 4. பத்திக் கைத்தரி துறைகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் - தயாசிறி ஜயசேகர 5. சந்தைப்படுத்தல் கூட்டுறவு சேவைகள் சந்தை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் - லசந்த அழகியவன்ன 6. சிறைச்சாலைகள் மறுசீரமைச்சு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் - சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே 7. தெங்கு, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை ஊக்குவிப்பு மற்றும் அது சார்ந்த கைத்தொழில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வகைப்படுத்தும் இராஜாங்க அமைச்சர் - அருந்திக்க பெர்னாண்டோ 8. கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் - நிமல் லன்சா 9. குத வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வசதிகள், படகுகள் மற்றும் கப்பல் கைத்தொழில் அபிவிருத்தி துறைமுக கப்பல்துறை இராஜாங்க அமைச்சர் - ஜயந்த சமரவீர 10. காணி முகாமைத்துவ விவகாரம், அரச தொழில்முயற்சி, காணி மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் - ரொஷான் ரணசிங்க 11. கம்பனி தோட்டங்களை சீர்திருத்தல், தேயிலை தோட்டங்கள் சார்ந்த பயிர்ச்செய்கை, தேயிலை தொழிற்சாலைகளை நவீனமயப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் - கனக ஹேரத் 12. தேசிய மரபுரிமை அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் - விதுர விக்ரமநாயக்க 13. கரும்பு, சோளம், மர முந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு - பெருந்தோட்டம் சார்ந்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புக்கான இராஜாங்க அமைச்சர் - ஜானக்க வகும்பர 14. அறநெறி பாடசாலைகள், பிக்கு கல்வி, பிரிவெனா மற்றும் பௌத்த பல்கலைக்கழக இராஜாங்க அமைச்சர் - விஜித்த பேருகொட 15. சமுர்த்தி, வதிவிட பொருளாதார, நுண் நிதிய, சுயதொழில், வியாபார அபிவிருத்தி மற்றும் கீழ் உழைப்பு பயன்பாட்டு அரச வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் - ஷெஹான் சேமசிங்க 16. உர உற்பத்தி மற்றும் வழங்கல்கள் இரசாயன உரங்கள் மற்றும் கிருமிநாசினி பாவனை இராஜாங்க அமைச்சர் - மொஹான் டி சில்வா 17. தங்காபரணங்கள் மற்றும் கனியவளங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் - லொஹான் ரத்வத்த 18. வாகன ஒழுங்குபடுத்தல், பஸ் போக்குவரத்து சேவைகள், ரயில் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் - திலும் அமுனுகம 19. வன ஜீவராசிகள் பாதுகாப்பு, யானைவேலி மற்றும் அகழிகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் - விமலவீர திசாநாயக்க 20. பிராந்திய உறவுகள் நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் - தாரக்க பாலசூரிய 21. கிராமிய வீடமைப்பு பிராந்திய உறவுகள் நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் - இந்திக்க அனுருத்த 22. அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள், இறால் வளர்ப்பு, கடற்றொழில், துறைமுகங்கள் அபிவிருத்தி, பலநாள் கடற்றொழில் அலுவல்கள் மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சர் - கஞ்சன விஜேசேகர 23. கிராமிய மற்றும் பிரதேச நீர் கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் - சனத் நிஷாந்த 24. மகாவலி வலயங்களை அண்டியுள்ள கால்வாய்களின் அகழிகள் மற்றும் குடியிருப்புக்கள் மற்றும் பொது உட்பட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் - சிறிபால கம்லத் 25. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் - சரத் வீரசேகர 26. கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் - அனுராத ஜயரத்ன 27. தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் - சதாசிவம் வியாழேந்திரன் 28. கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் - தேனுக விதானகமகே 29. சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் - சிசிர ஜயக்கொடி 30. மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பகல்வி அறநெறி பாடசாலை கல்விச்சேவைகள் மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் - பியல் நிஷாந்த டி சில்வா 31. பிரம்புகள், பித்தளை, மட்பாண்டங்கள், மரப் பொருட்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் - பிரசன்ன ரணவீர 32. விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் - டி. வீ. சானக்க 33. கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார் தொழில் இராஜாங்க அமைச்சர் - டி.பி. ஹேரத் 34. நெல் மற்றும் தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு மற்றும் விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் - ஷஷீந்திர ராஜபக்ஸ 35. நகர அபிவிருத்தி, கரையோர கழிவுப்பொருள் அகற்றல் மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் - நாலக்க கொடஹேவா 36. தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் - ஜீவன் தொண்டமான் 37. நிதி மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் - அஜித் நிவாட் கப்ரால் 38. திறன் அபிவிருத்தி தொழில் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் - சீதா அரம்பேபொல 39. ஔடத உற்பத்திகள் வழங்கல்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் - சன்ன ஜயசுமன அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்:  1. நிதி, புத்தசாசனம் - மத விவகாரம் மற்றும் கலாசார அலுவல்கள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் - மஹிந்த ராஜபக்ஸ 2. தொழில் அமைச்சர் - நிமல் சிறிபால டி சில்வா 3. கல்வி அமைச்சர் - ஜீ.எல். பீரிஸ் 4. சுகாதார அமைச்சர் - பவித்ராதேவி வன்னியாரச்சி 5. வௌிவிவகார அமைச்சர் - தினேஷ் குணவர்தன 6. கடற்றொழில் துறை அமைச்சர் - டக்ளஸ் தேவானந்தா 7. போக்குவரத்து துறை அமைச்சர் - காமினி லொக்குகே 8. வர்த்தகத்துறை அமைச்சர் - பந்துல குணவர்தன 9. வன ஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் - R.M.C.B. ரத்நாயக்க 10. அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் - ஜனக்க பண்டார தென்னகோன் 11. வெகுசன ஊடக அமைச்சர் - கெஹெலிய ரம்புக்வெல்ல 12. நீர்ப்பாசனத்துறை அமைச்சர் - சமல் ராஜபக்ஸ 13. மின்சக்தித் துறை அமைச்சர் - டலஸ் அழகப்பெரும 14. நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ 15. கைத்தொழில் துறை அமைச்சர் - விமல் வீரவன்ச 16. சுற்றாடல் துறை அமைச்சர் - மஹிந்த அமரவீர 17. காணி அமைச்சர் - எஸ். எம். சந்திரசேன 18. கமத்தொழில் துறை அமைச்சர் - மஹிந்தானந்த அளுத்கமகே 19. நீர்வழங்கல் துறை அமைச்சர் - வாசுதேவ நாணயக்கார 20. எரிசக்தி அமைச்சர் - உதய பிரபாத் கம்மன்பில 21. பெருந்தோட்டத்துறை அமைச்சர் - ரமேஷ் பத்திரண 22. சுற்றுலாத்துறை அமைச்சர் - பிரசன்ன ரணதுங்க 23.  துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் - ரோஹித அபேகுணவர்தன 24. இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் - நாமல் ராஜபக்ஸ 25. நீதித் துறை - அலி சப்ரி கடந்த காலங்களில் அமைச்சர்களாக பதவி வகித்த மக்கள் பிரதிநிதிகள் சிலருக்கு இம்முறை அமைச்சுப் பதவிகளோ, இராஜாங்க அமைச்சுப் பதவிகளோ வழங்கப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, எஸ்.பி. திசாநாயக்க, ஜோன் செனவிரத்ன, சந்திம வீரக்கொடி, கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ, ஜயரத்ன ஹேரத், ரஞ்சித் சியம்பலாபிட்டிய, மகிந்த யாப்பா அபேவர்தன, சுசில் பிரேமஜயந்த, மகிந்த சமரசிங்க, டிலான் பெரேரா, ஜகத் புஷ்பகுமார, அனுர பிரியதர்ஷன யாப்பா, துஷ்மந்த மித்ரபால மற்றும் ரோஹன திசாநாயக்க ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாமை குறிப்பிடத்தக்கது.