அரசவை இடிபாடு அகழ்வாராய்ச்சி மூலம் கண்டுபிடிப்பு

குருநாகல் அரசவை கட்டட இடிபாடுகள் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டுபிடிப்பு

by Staff Writer 12-08-2020 | 9:07 AM
Colombo (News 1st) குருநாகல் அரசவைக் கட்டடத்தின் இடிபாடுகளை தொல்பொருள் திணைக்களம் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டுபிடித்துள்ளது. குருநாகலில் பழைய ஆளுநர் கட்டடம் அமைந்துள்ள இடத்திலேயே இந்த இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆணையாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திசாநாயக்க தெரிவித்துள்ளார். அரசவை இருந்த இடத்திலேயே பழைய ஆளுநர் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை இடிபாடுகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குருநாகல் அரசவையின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்ட ஆளுநர் கட்டடத்தை அருங்காட்சியகமாக அபிவிருத்தி செய்யவுள்ளதாக பேராசிரியர் செனரத் திசாநாயக்க தெரிவித்துள்ளார். கிறிஸ்துவுக்கு பின் 1293 இல் இருந்து 1341 வரையான குருநாகல் இராஜதானி காலப்பகுதியில் பல்வேறு கட்டடங்கள் நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது புவனேகபாகு, நான்காம் பராக்கிரமபாகு, மூன்றாவது புவனேகபாகு மற்றும் ஐந்தாவது விஜயபாகு உள்ளிட்ட மன்னர்கள் குறித்த காலப்பகுதியில் நாட்டை ஆட்சி செய்துள்ளதுடன் அதன்பின்னர் கம்பளை இராஜதானி ஆட்சிக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்