by Staff Writer 12-08-2020 | 7:51 AM
Colombo (News 1st) அங்கொட லொக்காவின் சகாவான அசித்த ஹேமதிலக்க பொலிஸாரின் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.
முல்லேரியாவில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்த முற்பட்ட வேளை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர் முல்லேரியா - வெலிவிட்ட பகுதியில் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 'சோல்ட்டா' என்று அறியப்படும் அசித்த ஹேமதிலக அண்மையில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்.
குறித்த சந்தேக நபர் பல்வேறு கொலைச் சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த குற்றவாளி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.