மாலக்க சில்வா பிணையில் விடுவிப்பு

மாலக்க சில்வா பிணையில் விடுவிப்பு

மாலக்க சில்வா பிணையில் விடுவிப்பு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

12 Aug, 2020 | 1:59 pm

Colombo (News 1st) கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் ஒரு இலட்சம் ரூபா பணத்தை பலவந்தமாகப் பெற்றமை, உயிர் அச்சுறுத்தல் விடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் அவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் இன்று கடுவளை நீதவான் நிதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி மன்றில் மீண்டும் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, நேற்றிரவு மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா கைது செய்யப்பட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்