Colombo (News 1st) கொரோனா நோயாளர்கள் 9 பேர் நேற்று (11) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஐவர், சவுதி அரேபியாவில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வந்த ஒருவர் மற்றும் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய மூவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிணங்க, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,880 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 2,622 பேர் குணமடைந்துள்ளனர்.
